Recent Post

6/recent/ticker-posts

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026

TAMILNADU BUDGET 2025 - 2026
தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026

TAMIL

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த ஆளுநர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது.

அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) மீண்டும் கூடியது. தொடர்ந்து, 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 

சுமார் 2.33 மணி நேரம் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையாற்றினார். இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

துறைகள் வாரியாக நிதிஒதுக்கீடு விபரம்

பள்ளிக் கல்வி - ரூ.46,7675 கோடி

நகர்ப்புர வளர்ச்சி - ரூ.26,678 கோடி

ஊரக உள்ளாட்சி - ரூ.29,465 கோடி

உயர் கல்வி - ரூ.8,494 கோடி

போக்குவரத்து - ரூ.12,964 கோடி

நீர்வளத்துறை - ரூ.9,460 கோடி

நெடுஞ்சாலை - ரூ.20,722 கோடி

சமூக நலத்துறை ரூ.8,597 கோடி

மின்சாரத்துறை - ரூ.21,178 கோடி

மக்கள் நல்வாழ்வு - ரூ.21,906 கோடி

ஆதி திராவிடர், பழங்குடியினர் - ரூ.3,924 கோடி

தொழில்துறை - ரூ.5,833 கோடி

2024 - 2025 ஆம் ஆண்டின் வரவு - செலவு

மாநிலத்தின் சொந்த வரி வருவாய்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: 2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,95,173 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் சொந்த வரி வருவாய், திருத்த மதிப்பீடுகளில் 1,92,752 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2,20,895 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது வணிகவரிகளின் கீழ் 1,63,930 கோடி ரூபாய், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் 26,109 கோடி ரூபாய், வாகனங்கள் மீதான வரிகளின் கீழ் 13,441 கோடி ரூபாய் மற்றும் மாநில ஆயத்தீர்வையின் கீழ் 12,944 கோடி ரூபாய் வரி வருவாய் மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகும்.

மாநிலப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், வரி வசூல் திறனில் முன்னேற்றம் ஆகியவற்றின் பலனாக மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2025-26 ஆம் ஆண்டில் 14.60 சதவீத வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: 2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 30,728 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் திருத்த மதிப்பீடுகளில் 28,124 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2025-26 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 28,819 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வருவாய் மதிப்பீடான 249,713 கோடி ரூபாய் மொத்த வருவாய் வரவுகளில் 75.31சதவீதத்தைக் கொண்டிருக்கும்.

அரசின் பெருமுயற்சிகளால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்து வரும் அதே வேளையில், ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள், ஒன்றிய வரிகளில் பங்கு ஆகியவை மொத்த வருவாய் சதவீதத்தில் குறைந்துகொண்டே வந்துள்ளன.

ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: ஒன்றிய அரசு, ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை விடுவிக்க மறுத்ததும், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகிய இரு தொடர் பேரிடர்களின் நிவாரணப் பணிகளுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மிகச் சொற்பமான 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்ததும் மாநில அரசின் நிதிநிலையை வெகுவாகப் பாதித்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 23354 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள். திருத்த மதிப்பீடுகளில் 20,538 கோடி ரூபாயாக கணிசமான அளவிற்கு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் முழு பங்குத்தொகையை ஒன்றிய அரசு வரும் நிதியாண்டில் விடுவிக்கும் எதிர்பார்த்து. ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள் 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 23,834 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய தொகைகளின் விகிதம். கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாகவும் மிக அதிக அளவிலும் வீழ்ச்சியடைந்து வரும் வேளையில் 2016-17 ஆம் ஆண்டில் 3.41 சதவீதத்திலிருந்து, 2024-25 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீட்டில் 196 சதவீதமாக கணிசமாகக் குறைந்துள்ளது.

வருவாய் இழப்பு & நிதி பற்றாக்குறை

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: தற்போதைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், இந்த 145 சதவீதம் குறைவினால் மாநில அரசிற்கு ஏற்படக்கூடிய 45,182 கோடி ரூபாய் இழப்பானது.

2024 - 25 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையில் ஏறத்தாழ 44, 43 சதவீதத்திற்கு சமமாகும்.

2024 - 25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 299,009 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவினங்கள். திருத்த மதிப்பீடுகளில் 293,906 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் மொத்த வருவாய் வரவினங்கள் 3.31569 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது, திருத்த மதிப்பீடுகளைவிட 12.81 சதவீதம் அதிகமாகும்.

கடன் விகிதம் : 26.43% மதிப்பிடப்பட்டுள்ளது.

செலவீனங்கள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: செலவினங்களைப் பொறுத்தவரை, 2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 3,48,289 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் செலவினங்கள், வளர்ச்சிப் பணிகள் சாரா செலவினங்கள் குறைந்ததன் காரணமாக, திருத்த மதிப்பீடுகளில் 3,40,374 கோடி ரூபாயாகக் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்த வருவாய் செலவினங்கள் 3,73,204 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளைவிட 9.65 சதவீதம் வளர்ச்சி கொண்டதாகும்.

முக்கிய அம்சங்கள்

அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு லேப்டாப்

அரசுக் கல்லூரியில் பயிலும் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஆண்டுகளில் இலவச மடிக்கணினி கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விரும்பும் வகையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்

இலங்கைத் தமிழர் நலன்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: இலங்கைத் தமிழர் நலனில் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. 

அவர்களது கண்ணியமான வாழ்வினை உறுதி செய்யும் வகையில் 7469 வீடுகள் கட்டித்தருவதற்கான கட்டுமாணப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 3000 வீடுகள் ரூ.206 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.

"மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரும் நிதியாண்டில் 14.6%-ஆக, அதாவது ரூ.2.4 லட்சம் கோடியாக வளர்ச்சி பெறும்; நடப்பு ஆண்டில் ஒன்றிய அரசு வரியின் பங்கு ரூ.52,491 கோடியாக இருக்குமென கணிப்பு ஒன்றிய அரசு வழங்காததால் மாநில அரசின் நிதி நிலைமை வெகுவாக பாதித்து வருகிறது"

மின்பேருந்துகள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: காற்று மாசுபாட்டை குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்த சென்னைக்கு 950 மின்பேருந்துகள், கோவைக்கு 75 மின்பேருந்துகள், மதுரைக்கு 100 மின்பேருந்துகள் என 1125 மின்பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த ஆண்டுமுதல் அறிமுகப்படுத்தப்படும்

பட்ஜெட்டில் மீனவர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு ரூ.8,000 மானியம் வழங்கப்படும்; 3 ஆண்டு பழமையான விசைத்தறிகளை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி குமரி, நாகை உள்ளிட்ட மீனவ பகுதிகளில் மீன்பிடி இறங்குதளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

மெட்ரோ திட்டங்கள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே ரூ.9,335 கோடியிலும், கோயம்பேடு - பட்டாபிராம் இடையே ரூ 9,744 கோடியிலும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் இடையே ரூ 8,779 கோடியிலும் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்படும்

மருத்துவத்துறைக்கான திட்டங்கள்

நடமாடும் வாகனங்கள் மூலம் புற்றுநோய், இதயம் மருத்துவ பரிசோதனை செய்ய ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மருத்துவத் துறைக்கு ரூ.21,976 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

தொழில் துறைக்கான திட்டங்கள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: திசையன்விளை, காங்கேயம், மணப்பாறை உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டுத்திட்டம்

ரூ.150 கோடியில் புராதானக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிப்பு

பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கை.. பழங்குடியினர் மரபுசார் அறிவைப் பாதுகாக்க ஈரோடு -பர்கூர், கடம்பூர் மலைப்பகுதி, கள்ளக் குறிச்சி - கல்வராயன் மலைப்பகுதி பயன்பெறும்.. இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

ஓசூர், விருதுநகரில் புதிய டைடல் பூங்கா,,., இதன்மூலம் 6500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்,

திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா 250 ஏக்கரில் உருவாக்கப்படும்; 5,000 வேலைவாய்ப்புகள் இதன் மூலம் உருவாக்கப்படும்

சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா ரூ.250 கோடி மதிப்பீட்டில் உருவாக்கம்; 20,000 வேலைவாய்ப்புகள் இதன்மூலம் உருவாக்கப்படும்

மீனவர்களுக்கான அறிவிப்புகள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் நலன் கருதி, இலங்கையில் நெடுங்காலமாக மீட்க இயலாத நிலையில் உள்ள மீன்பிடி விசைப்படகுகளுக்கு நிவாரணத் தொகையை 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்.

இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கான நிவாரணத் தொகையை 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை சிறையில் வாடும் மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 350 ரூபாய் தின உதவித்தொகை 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் மீன் பிடிப்பு குறைவு மானியம் 1,79.147 மீனவர்களுக்குத் தலா 6,000 ரூபாய் வீதமும்.

மீன்பிடிப்புக் குறைவு காலத்திற்கென சேமித்து வைப்பதை ஊக்குவிக்க 2,10,850 மீனவர் மற்றும் 2,03,290 மீனவ மகளிருக்குத் தலா 3,000 ரூபாய் வீதமும், மீன்பிடி தடைக் காலத்தில். 1,98,923 மீனவர்களுக்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு 1500 ரூபாயுடன் மாநில அரசின் கூடுதல் பங்களிப்பாக 6,500 ரூபாயும் சேர்த்து தலா 8,000 ரூபாய் வீதமும் என. மொத்தம் 381 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எரி எண்ணெய் (டீசல்) மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கிட இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 286 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 2100 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட நான்கு வழி சாலை அமைக்கப்படும்

 

மாற்றுத்திறனாளி நலத்துறை 1433 கோடி ரூபாய் ஒதுக்கீடு

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் நியமன பதவி வழங்கும் வகையில் நடப்பு கூட்டத்தொடரில் சட்ட முன் வடிவு கொண்டு வரப்படும்

மாற்றுத்திறனாளிகள் தற்சார்புடன் இயல்புநிலைக்கு நிகரான செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் வகையில், உயர் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட திறன்மிகு கண்ணாடிகள் (Smart Vision Glasses), அறிவுசார் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கற்பிக்கும் உபகரணப் பெட்டகம் (TLM Kit) நிற்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீன உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகள் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு ஏற்ப வழங்கும் திட்டம் 125 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

பூவிதழ் எங்கும் பனித்துளிகள்

காற்றசைவில் வீழ்ந்திடாமல்.

மெல்ல அசைந்தாடும் மணப்புல் மலர்கள்

மட்சுவோ பாஷோ

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் மட்சுவோ பாஷோவின் அழகியல் ததும்பும் இக்கவிதை வரிகள், இயற்கையின் படைப்புகளுக்கு இடையே காணப்படும் ஆழமான பிணைப்பை மனிதர்களுக்கு உணர்த்திச் செல்கிறது.

இயற்கையினையும் உள்ளடக்கிய உலக உடன்பிறப்பு நேயத்தை உள்வாங்கி உருவாக்கப்பட்டதுதான் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம். இத்திட்டத்தின் கீழ், தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. ஆதரவற்றோர். தனித்து வாழும் முதியோர். ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள். பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள். மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

சதுரங்க விளையாட்டில் மாணவர்களை சாம்பியன்களாக உருவாக்கும் வகையில், பள்ளிப் பாடத்திட்டத்தில் உயர்கல்வியை சேர்க்கும் விதமாக உடற்கல்வி பாடத்திட்டம் உரிய முறையில் மாற்றியமைக்கப்படும்.,

புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தத் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக, நீலகிரி - குன்னூர், திண்டுக்கல் - நத்தம், சென்னை - ஆலந்தூர், விழுப்புரம் - விக்கிரவாண்டி, செங்கல்பட்டு - செய்யூர், சிவகங்கை - மானமதுரை, திருவாரூர் - முத்துப்பேட்டை, தஞ்சாவூர் - திருவிடைமருதூர், பெரம்பலூர், தூத்துக்குடி - ஒட்டப்பிடாரம் போன்ற இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்,.

5 நகர்புற சாலை பணிகளுக்கு ரூ.3750 கோடி ஒதுக்கீடு; சென்னையில் ரூ 486 கோடியிலும், கோவையில் ரூ.200 கோடியிலும், மதுரையில் ரூ.130 கோடியிலும் சாலைகள் மேம்படுத்தப்படும்

அண்ணா பல்கலைக்கழகத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டிலேயே சிறந்த கல்விநிறுவனங்களில் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் கொண்டு வரவும், உலகளவிலான தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள்ளும் கொண்டு வருவதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பிரிவில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 

பொறியியல் பொருட்கள், வாகன பாகங்கள், வார்ப்புகள், பம்புகள், ஆயத்த ஆடைகள், தோல் மற்றும் தோல் பொருட்கள் போன்ற பல தொழில்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. 

இந்தியாவிலேயே, அதிக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமையப்பெற்ற மாநிலங்களில், 32 இலட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. 

எதிர்வரும் 2025-26 ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் 10 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 25 இலட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும்.

பல்வேறு மாவட்டங்களில் புதிய நூலகங்கள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: தென் தமிழ்நாட்டின் அறிவாலயமாகத் திகழ்ந்திடும் மதுரை மாநகரில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு, இதுவரை 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, கோவை மற்றும் திருச்சியில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அறிவைப் பரவலாக்கிடும் முயற்சிகளின் அடுத்த கட்டமாக, சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலியில் பொதுமக்கள், போட்டித் தேர்வு எழுதிடும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக தலா ஒரு இலட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூட வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்படும்.

தொழில்துறை

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: நிதியமைச்சரின் உரையிலிருந்து, "மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் தோல் பொருட்கள், தானியங்கி வாகனங்கள் மற்றும் வாகன உபபாகங்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. 

நாட்டிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்தப் பெண் தொழிலாளர்களில் 41 சதவீதத்தினரை தன்னகத்தே கொண்ட சிறப்பையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. 

ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொழில்துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது.

தேசிய ஏற்றுமதியில் 33 சதவீத பங்களிப்புடன் இந்தியாவின் மிகப்பெரும் மின்னணுப் பொருட்களுக்கான ஏற்றுமதிச் சூழல்கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. 

2020-21 ஆம் ஆண்டில் 1.66 பில்லியன் டாலராக இருந்த மாநிலத்தின் மின்னணு ஏற்றுமதி, 2023-24 ஆம் ஆண்டில் 9.56 பில்லியன் டாலராக அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது. மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை பெற்றிட பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது"

ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா! 20,000 வேலைவாய்ப்புகள்

ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030

திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும்

ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும்

மகளிருக்கான திட்டங்கள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: 40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான அட்டை வழங்கப்படும் இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டம்

மூன்றாம் பாலினத்தவர்கள் நல்வாழ்விற்கான பல திட்டங்கள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: மூன்றாம் பாலினத்தவர்கள் நல்வாழ்விற்கான பல திட்டங்கள்  தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களது சமூகப் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்து வாழ்வில் வெற்றி பெற உயர்கல்வி கற்பது இன்றியமையாதது ஆகும். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவு படுத்தப்படும்.

மூன்றால் பாலினத்தவருக்கு போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் உரிய பயிற்சிகள் வழங்கி ஊர்க்காவல் பணியில் ஈடுபத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஊர்க்காவல் படையினருக்கு இணையாக ஊதியம், பயிற்சி, சீருடை வழங்கப்படும்..


பள்ளிகளுக்கான திட்டங்கள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: சமக்ர சிக்ஷா திட்டத்தில் 2,152 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை; ரூ.2,000 கோடி நிதியை இழந்தாலும் இருமொழிக் கொள்கையை விட்டுத் தர மாட்டோம். மாணவர், ஆசிரியர்களின் நலன் கருதி மாநில அரசே நிதியை .விடுவித்துள்ளது; மும்மொழிக் கொள்கையை ஏற்காமல் இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம்

ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வு!

ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு!

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் நீட்டிக்கப்பட்டு, மேலும் ரூ.600 கோடி ஒதுக்கீடு; இத்திட்டத்தால் தற்போது 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்

ரூ.83 கோடியில் புதிய குழந்தை மையங்கள் அமைக்கப்படும்

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு; 2,000 அரசுப் பள்ளிகளில் ரூ.160 கோடியில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு

500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களுக்கு நடத்தப்படும்.

1721 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள்.

பள்ளிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க மாநில அரசே சொந்த நிதியை விடுவித்துள்ளது.

பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000

முதன்மை சுற்றுக் குழாய் திட்டம்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: முதன்மைச் சுற்றுக்குழாய் எனும் திட்டம் மூலம் அனைத்து நீர் பகிர்மான நிலையங்களையும் இணைத்து சென்னையில் உள்ள அனைத்து குடிநீர் விநியோக நிலையங்களுக்கும் சமமான அளவில் குடிநீர் வழங்க உறுதி செய்யப்படும். இத்திட்டம் ரூ.2423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் கீழ் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களை மேம்படுத்த ரூ.625 கோடி ரூபாய் புதிய திட்ட மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள்

புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம்

நகர்புற வளர்ச்சி

நகர்புற வளர்ச்சித்துறைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

6100 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் 864 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

2000 ஏக்கர் பரப்பளவில் சென்னை அருகே புதிய நகரம் அமைக்கப்படும்

சாலைகள், பேருந்து வசதிகள் ,ரயில்வே ,மெட்ரோ வசதிகள் இதற்காக உருவாக்கப்படும். இதற்கான பணிகளை விரைவில் tidco நிறுவனம் தொடங்கும்.

சென்னையில் 7 இடங்களில் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீரை உறிஞ்சும் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்

மகளிர் உரிமை தொகை பயன் பெறாத புதிய பயனாளிகளுக்கு விரைவில் வாய்ப்பு வழங்கப்படும்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் குறைக்கு 26,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு

10 ஆயிரம் சுய உதவி குழுக்கள் இந்த நிதி ஆண்டில் உருவாக்கப்படும். 37 ஆயிரம் கோடி வங்கி கடன் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும்

மகளிர் விடியல் பயணத்திற்கு 3600 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்படுத்தும் திட்டத்திற்கு 2200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள்!

சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்

அருங்காட்சியகங்கள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் எழுதப்பட வேண்டும்.

ரூ.22 கோடி மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம்

ரூ.21 கோடி மதிப்பீட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம்

ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்!

8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு

சிவகங்கை - கீழடி

சேலம்-தெலுங்கலூர்

கோயம்புத்தூர் - வெள்ளலூர்

கள்ளக்குறிச்சி ஆதிச்சனூர்

கடலூர் - மணிக்கொல்லை

தென்காசி-கரிவலம்வந்தநல்லூர்

தூத்துக்குடி- பட்டணமருதூர்

நாகப்பட்டினம்

வரும் நிதியாண்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ள 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...

அனைத்து மொழிகளிலும் திருக்குறள்

TAMILNADU BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: திருக்குறள் இதுவரை 28 இந்திய மொழிகளிலும், 35 உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில், பன்னாட்டு பதிப்பாளர்கள் 28 வெவ்வேறு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்திட முன்வந்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து 45 வெவ்வேறு உலக மொழிகளில் கூடுதலாக மொழி பெயர்க்கப்படும்போது ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட 193 உலகநாடுகளில் அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையினை திருக்குறள் பெறும். இத்திட்டத்திற்கு ரூ.133 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும் நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் புதிய நகரில் அமையும்

இரும்பின் உறுதியோடு, உரக்கச் சொல்வோம். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்

ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்

பட்ஜெட்டை வாசித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.. எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டை சமநிலை தவறாமல் வழி நடத்துவோம் என்றும் இந்தியாவில் 2ஆவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும் தெரிவித்தார்.

ENGLISH

TAMILNADU BUDGET 2025 - 2026: The first session of the Tamil Nadu Legislative Assembly of this year was held on January 6th. Although Governor R.N. Ravi skipped his speech that day, the Governor's address read in Tamil by Speaker M. Appavu was included in the minutes of the House.

The debate on the motion of thanks to the Governor's address and Chief Minister M.K. Stalin's reply were held until the 11th.

The assembly session was also adjourned without specifying the date. The Tamil Nadu Legislative Assembly reconvened today (March 14). Subsequently, Finance Minister Thangam Thennarasu presented the budget for the year 2025-26. 

Minister Thangam Thennarasu delivered the budget speech for about 2.33 hours. In this situation, let's see how much money has been allocated to which department in the Tamil Nadu budget.

Department-wise allocation details

School Education - Rs. 46,7675 crore

Urban Development - Rs. 26,678 crore

Rural Local Government - Rs. 29,465 crore

Higher Education - Rs. 8,494 crore

Transport - Rs. 12,964 crore

Water Resources - Rs. 9,460 crore

Highways - Rs. 20,722 crore

Social Welfare - Rs. 8,597 crore

Power - Rs. 21,178 crore

People's Welfare - Rs. 21,906 crore

Adi Dravidar, Tribals - Rs. 3,924 crore

Industry - Rs. 5,833 crore

Budget - Expenditure for the year 2024 - 2025

State's Own Tax Revenue

TAMILNADU BUDGET 2025 - 2026: 2024-25 The state's own tax revenue, which was estimated at Rs. 1,95,173 crore in the budget estimates for the year, has been estimated at Rs. 1,92,752 crore in the revised estimates.

The state's own tax revenue has been estimated at Rs. 2,20,895 crore in the budget estimates for the year 2025-26.

This includes tax revenue estimates of Rs. 1,63,930 crore under commercial taxes, Rs. 26,109 crore under stamp and registration fees, Rs. 13,441 crore under taxes on vehicles and Rs. 12,944 crore under state excise duty.

The state's own tax revenue is estimated to grow by 14.60 per cent in 2025-26 on the back of the growth in the state economy, revisions in tax rates and improvement in tax collection capacity.

State's Own Non-Tax Revenue

TAMILNADU BUDGET 2025 - 2026: The State's own non-tax revenue, which was estimated at Rs. 30,728 crore in the Budget Estimates for 2024-25, has been estimated at Rs. 28,124 crore in the Revised Estimates.

The State's own non-tax revenue has been estimated at Rs. 28,819 crore in the Budget Estimates for 2025-26. Overall, the State's own revenue estimate of Rs. 249,713 crore in the Budget Estimates for 2025-26 will constitute 75.31 percent of the total revenue receipts.

While the State's own tax revenue is increasing due to the government's great efforts, the share of grants-in-aid and Union taxes in the total revenue has been decreasing.

Grants-in-aid received from the Union Government

TAMILNADU BUDGET 2025 - 2026: The Union Government has stopped releasing funds under the Integrated Education Mission, refused to release funds from the National Disaster Relief Fund for Tamil Nadu affected by Cyclone Fanjal, and released only a meager Rs. 276 crore from the National Disaster Relief Fund for relief work in the wake of two series of disasters - Cyclone Mijjam and the floods in the southern districts.

The grants-in-aid received from the Union Government, estimated at Rs. 23,354 crore in the Budget Estimates for the year 2024-25, has been estimated to be significantly reduced to Rs. 20,538 crore in the Revised Estimates.

The Union Government is expected to release the entire share of the Integrated Education Scheme in the coming financial year. The Union Government’s grant-in-aid has been estimated at Rs 23,834 crore in the Budget Estimates for 2025-26.

Overall, the share of Union Government’s grant-in-aid as a percentage of the State’s GDP has been declining steadily and at a very high rate over the past few years, declining significantly from 3.41 per cent in 2016-17 to 196 per cent in the revised estimates for 2024-25.

Revenue loss: Fiscal deficit

TAMILNADU BUDGET 2025 - 2026: This 145 per cent shortfall in the current State GDP means a loss of Rs 45,182 crore to the State Government.

This is equivalent to approximately 44.43 per cent of the fiscal deficit estimated in the revised estimates for 2024-25.

Total revenue receipts estimated at Rs. 299,009 crore in the Budget Estimates for 2024-25. Estimated at Rs. 293,906 crore in the Revised Estimates. Total revenue receipts for 2025-26 are estimated at Rs. 3.31569 crore.

This is 12.81 percent higher than the Revised Estimates.

Debt ratio: Estimated at 26.43%.

Expenditure

TAMILNADU BUDGET 2025 - 2026: In terms of expenditure, the total revenue expenditure, which was estimated at Rs. 3,48,289 crore in the Budget Estimates for 2024-25, has been reduced to Rs. 3,40,374 crore in the Revised Estimates due to a decrease in non-development expenditure.

The total revenue expenditure in the Budget Estimates for 2025-26 has been estimated at Rs. 3,73,204 crore. This is a growth of 9.65 percent over the Revised Estimates for 2024-25.

IMPORTANT FEATURES OF BUDGET

Laptops for girls studying in government colleges

TAMILNADU BUDGET 2025 - 2026: 20 lakh college students studying in government colleges will be provided with free laptops in 2 years. College students will be provided with a laptop or a computer of their choice in the form of a laptop

Welfare of Sri Lankan Tamils

TAMILNADU BUDGET 2025 - 2026: The Tamil Nadu government is taking all measures for the welfare of Sri Lankan Tamils. Construction work is underway to build 7469 houses to ensure their dignified life. In the next phase, 3000 houses will be built for Sri Lankan Tamils ​​living in camps at an estimated cost of Rs. 206 crore.

"The state's own tax revenue will grow by 14.6% in the coming financial year, i.e. Rs. 2.4 lakh crore; the Union government's share of the tax in the current year is estimated to be Rs. 52,491 crore, which is affecting the financial situation of the state government greatly."

Electric buses

TAMILNADU BUDGET 2025 - 2026: To reduce air pollution and improve the environment, 1125 electric buses, including 950 electric buses for Chennai, 75 electric buses for Coimbatore, and 100 electric buses for Madurai, will be introduced for public use from this year

Special announcements for fishermen in the budget

TAMILNADU BUDGET 2025 - 2026: Fishermen will be given a subsidy of Rs. 8,000 during the fishing ban; Rs. 50 crore to upgrade 3-year-old power looms Infrastructure facilities including fishing landing sites will be improved in fishing areas including Kumari and Nagai

Metro projects

Chennai Metro Rail will be expanded at a cost of Rs. 9,335 crore between Airport - Kalampakkam, Rs. 9,744 crore between Koyambedu - Pattabiram, and Rs. 8,779 crore between Poonamallee - Sriperumbudur

Projects for the medical sector

Rs. 40 crore will be allocated for cancer and heart medical check-ups through mobile vehicles.

Rs. 21,976 crore has been allocated for the medical sector

Plans for the industrial sector

TAMILNADU BUDGET 2025 - 2026: New government vocational training centers will be set up in 10 places including Disayanvilai, Kangeyam, and Manapparai..

Group insurance scheme for internet-based workers

Renovation of ancient buildings without changing their originality at Rs. 150 crore

Tribal livelihood policy.. Erode-Barkur, Kadambur hill area, Kallakurichi-Kalvarayan hill area will benefit from preserving tribal traditional knowledge.. Rs. 10 crore has been allocated for this..

New Tidal Park in Hosur, Virudhunagar,,., This will create employment for 6500 youth,

Engineering and foundry industrial park will be created in Trichy on 250 acres; 5,000 jobs will be created through this

While the Chief Minister's Creative Centre set up in Kolathur, Chennai has been well received, it has been announced in the budget that it will be set up in 30 corporations including Chennai, Coimbatore, Madurai, Trichy, Tambaram, Avadi.

A footwear industrial park will be set up in Madurai and Cuddalore at an estimated cost of Rs. 250 crore; 20,000 jobs will be created through this

Announcements for fishermen

TAMILNADU BUDGET 2025 - 2026: In the interest of the owners of boats seized by the Sri Lankan government, the relief amount should be increased to Rs. 8 lakh for fishing boats that have been unable to be recovered in Sri Lanka for a long time.

It has also been ordered to increase the relief amount for country-made boats equipped with engines to Rs. 2 lakh.

The daily allowance of Rs. 350 given to the families of fishermen languishing in Sri Lankan prisons has been increased to Rs. 500.

This financial year, the subsidy for fishing reduction is Rs. 6,000 each for 1,79,147 fishermen.

To encourage saving for the fishing reduction period, Rs. 3,000 each for 2,10,850 fishermen and 2,03,290 fisherwomen, and during the fishing ban period, Rs. 8,000 each for 1,98,923 fishermen, along with a contribution of Rs. 1,500 from the Union Government and an additional contribution of Rs. 6,500 from the State Government. A total of Rs. 381 crore has been allocated for the subsidy.

In this budget estimate, Rs. 286 crore has been allocated for the provision of fuel oil (diesel) and kerosene at subsidized prices.

A four-lane highway will be constructed from Thiruvanmiyur to Utthandi at an estimated cost of Rs. 2,100 crore.

1433 crore rupees allocated for the Welfare of the Disabled

TAMILNADU BUDGET 2025 - 2026: The Welfare of the Disabled - A bill will be introduced in the current session to provide appointment posts in all types of local government bodies

To help the disabled to independently carry out activities equivalent to normal, a scheme to provide various modern equipment including high-tech advanced Smart Vision Glasses, a Teaching Equipment Box (TLM Kit) for children with intellectual disabilities and modern equipment to help the disabled who cannot stand, according to the needs of all types of disabled people will be implemented at a cost of 125 crore rupees.

Chief Minister's Mother's Day Scheme

Dewdrops everywhere in the flower field

Do not fall in the wind.

Slowly swaying mane grass flowers

Matsuo Basho

These lines of poetry, which are full of beauty and beauty, by Matsuo Basho, a famous Japanese haiku poet who lived in the 17th century, make people realize the deep bond between the creations of nature.

The Chief Minister's Motherhood Scheme was created by embracing the universal brotherhood that includes nature. Under this scheme, the government has decided to identify the poorest families who are currently living in extreme poverty and improve their quality of life. The destitute. 

The elderly living alone. Single-parent families. Children who have lost their parents, the mentally ill. The differently-abled, and families with children with special needs, all people living on the margins of society such as families will be identified under this scheme and will be given priority in government welfare schemes, not only for the basic facilities they need.

The physical education curriculum will be modified accordingly to include higher education in the school curriculum in order to make students champions in chess.

New Government Arts and Science Colleges

TAMILNADU BUDGET 2025 - 2026: The higher education enrollment of students in Tamil Nadu is continuously increasing. To meet the needs, new government arts and science colleges will be set up in places like Nilgiris - Coonoor, Dindigul - Natham, Chennai - Alandur, Villupuram - Vikravandi, Chengalpattu - Seyyur, Sivagangai - Manamadurai, Thiruvarur - Muthupettai, Thanjavur - Thiruvidaimarudur, Perambalur, Thoothukudi - Ottapidaram,.

5 Rs.3750 crore allocated for urban road works; Roads will be improved at a cost of Rs 486 crore in Chennai, Rs 200 crore in Coimbatore and Rs 130 crore in Madurai

Action plans will be formulated to bring Anna University within the next 5 years to be ranked among the top 10 best educational institutions in the country and to be ranked among the top 150 in the global ranking list. Appropriate steps will be taken to place Anna University among the best educational institutions in Asia.

Loans to Micro, Small and Medium Enterprises

TAMILNADU BUDGET 2025 - 2026: Tamil Nadu is the leading state in India in the Micro, Small and Medium Enterprises category. Tamil Nadu leads in many industries such as engineering products, vehicle parts, castings, Pumps, ready-made garments, leather and leather products. 

Among the states with the highest number of MSMEs in India, Tamil Nadu is at the third position with more than 32 lakh registrations. In the upcoming financial year 2025-26, banks will provide bank loans of Rs. 25 lakh crore to 10 lakh micro, small and medium enterprises.

New libraries in various districts

TAMILNADU BUDGET 2025 - 2026: It is noteworthy that more than 15 lakh readers have visited the Kalaignar Centenary Library established in Madurai city, which is considered the knowledge center of South Tamil Nadu. Following this, work is underway to set up giant libraries in Coimbatore and Trichy. 

As the next step in the efforts to spread knowledge, libraries with one lakh books each and conference hall facilities will be set up in Salem, Cuddalore and Tirunelveli for the benefit of the general public and students appearing for competitive exams.

Industry

TAMILNADU BUDGET 2025 - 2026: From the Finance Minister's speech, "Tamil Nadu continues to lead the country in exports of electronic goods and production of leather goods, automobiles and auto parts. 

Tamil Nadu also has the distinction of having 41 percent of the total female workers working in factories in the country. It is also noteworthy that Tamil Nadu has topped the Export Readiness Index released by the Union Government's NITI Aayog. Tamil Nadu has been attracting a large amount of investment in the industry for the last two years.

Tamil Nadu is the state with the largest export environment for electronic goods in India, contributing 33 percent to the national exports. The state's electronic exports, which were $ 1.66 billion in 2020-21, have grown rapidly to $ 9.56 billion in 2023-24. The government is taking several initiatives to ensure that Tamil Nadu continues to lead in the production and export of electronic goods"

Madurai, Cuddalore at a cost of Rs. 250 crore Footwear Industry! 20,000 jobs

Tamil Nadu Semiconductor Mission 2030 at Rs. 50 crore

Engineering Industrial Park to be set up in Trichy

Tidal Park to be set up at Rs. 400 crore in Hosur. An intellectual technology corridor will also be set up here

Projects for women

TAMILNADU BUDGET 2025 - 2026: Construction workers above 40 years of age to be provided with a full body medical check-up card Group insurance scheme for internet workers

Many schemes for the well-being of the third gender

TAMILNADU BUDGET 2025 - 2026: Many schemes for the well-being of the third gender are being implemented in Tamil Nadu. Higher education is essential to ensure their socio-economic development and success in life. The scheme of providing Rs. 1000 per month to female students pursuing higher education through the Innovative Women and Tamil Sons schemes will be extended to the third gender as well.

It is planned to provide appropriate training to the third gender to carry out traffic management and crowd control work during festivals and to engage them in home guard work. They will be given salary, training and uniforms on par with home guard forces.

Schemes for schools

TAMILNADU BUDGET 2025 - 2026: The central government has not released 2,152 crores for the Samagra Shiksha scheme; Even if we lose Rs. 2,000 crores, we will not give up the bilingual policy. The state government has released the funds for the welfare of students and teachers; We are committed to the bilingual policy instead of accepting the trilingual policy

With Rs. 65 crore, efficient classrooms in 2,676 schools have been upgraded!

With Rs. 56 crore, 880 high-tech laboratories have been upgraded!

The breakfast scheme has been extended to urban government-aided schools and an additional allocation of Rs. 600 crore has been made; 17.53 lakh students are currently benefiting from this scheme

New child care centres to be set up at a cost of Rs. 83 crore

Rs. 1,000 crore allocated for infrastructure in government schools; Rs. 160 crore for upgrading computer labs in 2,000 government schools

Awareness programmes on higher education will be conducted for students in 500 government schools.

1721 postgraduate teachers and 841 graduate teachers will be appointed soon.

The state government has released its own funds to ensure that the functioning of schools is not affected.

50,000 children who have lost both parents will be given Rs. 2,000 monthly till the age of 18

Main Circuit Pipe Scheme

TAMILNADU BUDGET 2025 - 2026: The Main Circuit Pipe Scheme will ensure equal supply of drinking water to all drinking water supply points in Chennai by connecting all water distribution points. This scheme will be implemented within the next 3 years at an estimated cost of Rs. 2423 crore.

Work will be carried out at a new project estimate of Rs. 625 crore to improve the joint drinking water schemes under the Tamil Nadu Drinking Water Board.

New joint drinking water schemes

New joint drinking water schemes in districts like Pudukkottai, Mayiladuthurai, Tenkasi, Thoothukudi, Tiruvallur, Tiruppur

Urban Development

26 thousand crore rupees allocated for the Urban Development Department

6100 km of rural roads will be improved

A joint drinking water project will be implemented in the Kadayanallur area of ​​Tenkasi district at an estimated cost of 864 crore rupees.

A new city will be built near Chennai on an area of ​​2000 acres

Roads, bus facilities, railways and metro facilities will be created for this. The work for this will be started soon by TIDCO.

A biodiversity park that absorbs rainwater will be set up at 7 places in Chennai at an estimated cost of 88 crore rupees

New beneficiaries who have not benefited from the women's rights amount will be given an opportunity soon

26,678 crore rupees allocated for the municipal administration and water supply

10 thousand self-help groups will be formed this financial year. 37 thousand crores bank loans will be given to self-help groups

3600 crore rupees allocated for the women's dawn journey.

Chief Minister allocates Rs 2200 crore for rural road improvement project.

Rs 77 crore for 800 working women to benefit from hostels in 10 more places!

Rs 275 crore for hostels for 1,000 students each in Chennai, Coimbatore and Madurai

Museums

TAMILNADU BUDGET 2025 - 2026: The history of the Indian subcontinent should now be written from the Tamil land.

Noyyal Museum in Erode district at an estimated cost of Rs 22 crore

Navai Museum in Ramanathapuram district at an estimated cost of Rs 21 crore

Aimpon and Copper Thirumenigal Gallery at Egmore Museum at an estimated cost of Rs 40 crore!

Rs. 7 crore allocated for archaeological research at 8 locations

Sivaganga - Keezhadi

Salem-Telungalur

Coimbatore - Vellalur

Kallakurichi Adichanur

Cudalur - Manikollai

Thenkasi-Karivalamvanthanallur

Thoothukudi-Pattanamarudhur

Nagapattinam

Rs. 7 crore allocated for archaeological excavations and scientific research in the coming financial year...

Thirukkural in all languages

TAMILNADU BUDGET 2025 - 2026: Thirukkural has so far been translated into 28 Indian languages ​​and 35 world languages. At the International Book Fair, international publishers have come forward to translate Thirukkural into 28 different languages. 

Following this, when it is translated into 45 different world languages, Thirukkural will gain the distinction of being translated into all the official languages ​​of the 193 world countries recognized by the United Nations. Rs. 133 lakh has been allocated for this project.

A new city will be built on an area of ​​2,000 acres near Chennai. Infrastructure facilities like urban squares and parks will be provided in the new city

We will say it loudly with iron determination. The history of the Indian subcontinent should now be written starting from the Tamil land

A World Tamil Olympiad will be held every year

Finance Minister Thangam Thennarasu, who read out the budget, said that no matter how many obstacles come, we will lead Tamil Nadu in a balanced manner and that Tamil Nadu is the state with the 2nd largest economy in India.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel