TAMILNADU GOVERNMENT ECONOMIC SURVEY 2025 - 2026
தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கை 2025 - 2026
TAMIL
TAMILNADU GOVERNMENT ECONOMIC SURVEY 2025 - 2026 / தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கை 2025 - 2026: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாளில் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடும்.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு தரப்பில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். அந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 8 சதவிகிதமாக இருக்கும்.
வலுவான கொள்கை காரணமாக பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் உள்ளது. தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரித்துள்ளது. தேசிய சராசரியை விடவும் 1.64 மடங்கு அதிகமாகும்.
கோவை, மதுரை, திருப்பூர், திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் மத்திய அரசின் ரூபாய் குறியீடான ₹-க்கு பதிலாக ரூ என்று பயன்படுத்தப்பட்டுள்ளது.
2023-24ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.27.22 லட்சம் கோடியாகும். அதேபோல் பொருளாதார வளர்ச்சி 8.23 சதவிகிதமாக உள்ளது.
மாநிலத்தின் மக்கள் தொகையில் 31.8 சதவிகிதம் உள்ள வடக்கு மண்டலம், சிஎஸ்டிபியில் 36.6 சதவிகிதம் என்ற அதிகபட்ச பங்களிப்பை வழங்குகிறது. அதேபோல் ஒரு ரூபாயில் தமிழக அரசின் வருவாய் எவ்வளவு, செலவு எவ்வளவு என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு ரூபாயில் கடன்களை திருப்பி செலுத்துவதற்கு 9.1 சதவிகிதமும், வட்டி செலுத்துவதற்கு 14.1 சதவிகிதமும் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் மூலதனச் செலவுகளுக்கு 10.5 சதவிகிதமும் செய்யப்படுகிறது.
அதேபோல் 18.7 சதவிகிதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும், 8.3 சதவிகிதம் ஓய்வூதியத்திற்கும், கடன் வழங்குதலுக்கு 3.6 சதவிகிதமும், உதவித் தொகை மற்றும் மானியங்களுக்கு 32.4 சதவிகிதமும் பயன்படுத்தப்படுகிறது.
ENGLISH
TAMILNADU GOVERNMENT ECONOMIC SURVEY 2025 - 2026: The central government releases the economic survey for the current financial year on the day before presenting the budget every year. In that regard, the budget will be presented by the Tamil Nadu government tomorrow.
In this regard, Chief Minister M.K. Stalin released the Tamil Nadu Economic Survey today. This is the first time that the Tamil Nadu government is releasing the economic survey. In the report, Tamil Nadu's growth will be 8 percent in the current financial year.
The economy is on the growth path due to strong policies. The per capita income in Tamil Nadu has increased to Rs. 2.78 lakh. This is 1.64 times higher than the national average.
It has been reported that cities like Coimbatore, Madurai, Tiruppur, Trichy, Salem have made a major contribution. Similarly, the central government's rupee symbol ₹ has been replaced by Rs.
In the financial year 2023-24, Tamil Nadu's gross domestic product will be Rs. 27.22 lakh crore. Similarly, the economic growth is 8.23 percent.
The northern region, which has 31.8 percent of the state's population, contributes the highest share of 36.6 percent to the CSDP. Similarly, the details of how much revenue and expenditure of the Tamil Nadu government is in one rupee have also been released.
Accordingly, 9.1 percent of one rupee is used for repayment of loans and 14.1 percent for interest payment. Similarly, 10.5 percent is spent on capital expenditure. Similarly, 18.7 percent is used for salaries of government employees, 8.3 percent for pension, 3.6 percent for loan disbursement and 32.4 percent for assistance and subsidies.
0 Comments