பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, பால்வள மேம்பாட்டுக்கான திருத்தப்பட்ட தேசிய திட்டமான என்பிடிடி (NPDD) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் திட்டமான திருத்தப்பட்ட என்பிடிடி, கூடுதலாக 1000 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டு, பதினைந்தாவது நிதிக்குழு காலத்திற்கான (2021-22 முதல் 2025-26 வரை) மொத்த நிதி ஒதுக்கீடு ₹2790 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த முயற்சி பால்வள உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது துறையின் நிலையான வளர்ச்சியையும் உற்பத்தித்திறனையும் உறுதி செய்கிறது.
திருத்தியமைக்கப்பட்ட என்பிடிடி, பால் கொள்முதல், பதப்படுத்தும் திறன், சிறந்த தரக்கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும். இதன் மூலம் பால்வளத் துறைக்கு உத்வேகம் அளிக்கும்.
விவசாயிகள் சந்தைகளுக்கு சிறந்த அணுகலைப் பெற உதவுவது, மதிப்புக் கூட்டல் மூலம் சிறந்த விலையை உறுதி செய்வது, விநியோகச் சங்கிலியின் செயல்திறனை மேம்படுத்துவது, அதிக வருமானம், அதிக கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்கு இது வழிவகுக்கும்.
0 Comments