Recent Post

6/recent/ticker-posts

WORLD HAPPIESTS COUNTRIES 2025 / உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் 2025

WORLD HAPPIESTS COUNTRIES 2025
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் 2025

WORLD HAPPIESTS COUNTRIES 2025 / உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் 2025

TAMIL

WORLD HAPPIESTS COUNTRIES 2025 / உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் 2025: ஒரு நாட்டின் மகிழ்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டும் கொண்டு அளவிடப்படுவதில்லை. மாறாக மக்களிடையே சமூக பிணைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவை பெரும் பங்கு வகிக்கிறது.

ஐ.நாவின் சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த பட்டியலில், பின்லாந்து என்ற நாடு தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் நேற்று (20-03-25) சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தவர் மீது அக்கறை செலுத்துவது, உணவைப் பகிர்வது, நம்பிக்கை கொள்வது, தாராள மனப்பான்மை உதவிகளை பெறுவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்டவைகளை கொண்டு 147 நாடுகளின் மகிழ்ச்சி நிலைகளை கண்டறிந்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், 7.74 என்ற சராசரி அளவைப் பெற்ற பின்லாந்து, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில், டென்மார்க் இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும், ஸ்வீடன் நான்காவது இடத்தையும், நெதர்லாந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில், இந்தியா 118வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு 126வது இடத்தில் இருந்த இந்தியா இந்தாண்டில், 118வது இடத்தில் இருப்பது நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், உக்ரைன், ஈராக் உள்ளிட்ட பல மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளை விட இந்தியா பின் தங்கியிருப்பது சற்று கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 109வது இடத்தையும், சீனா 68வது இடத்தையும், இலங்கை 133வது இடத்தையும், வங்கதேசம் 134வது இடத்தையும் பிடித்துள்ளது.

அதே போல், உலகின் மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் மிகவும் பின்தங்கியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனமான சட்டம், அவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான வாழ்வுமுறை ஆகியவையே, மகிழ்ச்சியற்று இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகின் மகிழ்ச்சியான 10 நாடுகளின் பட்டியல்

  1. பின்லாந்து
  2. டென்மார்க்
  3. ஐஸ்லாந்து
  4. ஸ்வீடன்
  5. நெதர்லாந்து
  6. கோஸ்டாரிகா
  7. நோர்வே
  8. இஸ்ரேல்
  9. லக்சம்பர்க்
  10. மெக்சிகோ

மகிழ்ச்சியற்ற நாடுகள்

WORLD HAPPIESTS COUNTRIES 2025 / உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் 2025: மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் 147 இடத்தை பிடித்து மீண்டும் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

அதற்கு முந்தைய இடங்களில் சியரா லியோன் - 146, லெபனான் - 145, மலாவி - 144 மற்றும் ஜிம்பாப்வே - 143 ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தரவரிசையில் ஆப்கானிஸ்தான் உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடாக உள்ளது.

ஆப்கானியப் பெண்கள் தங்கள் வாழ்க்கை மிகவும் கடினமானது என்று கூறுகிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவில் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் சியரா லியோன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து லெபனான் கடைசியிருந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

ENGLISH

WORLD HAPPIESTS COUNTRIES 2025: The happiness of a country is not measured by economic growth alone. Rather, social cohesion and mutual trust between people play a major role. Every year, on the occasion of the UN's International Day of Happiness, a list of the happiest countries is published.

In this list, the country Finland has consistently topped the list. In this situation, the International Day of Happiness was celebrated all over the world yesterday (20-03-25). In that regard, the list of the happiest countries for the year 2025 has been published.

This list has been published by identifying the happiness levels of 147 countries based on caring for others, sharing food, trust, receiving generous assistance, and gross domestic product. Out of which, Finland, with an average score of 7.74, has topped the list of the happiest countries in the world.

In this list, Denmark is second, Iceland is third, Sweden is fourth, and the Netherlands is fifth. In this list, India is ranked 118th. India, which was ranked 126th in 2024, is seen as a good thing this year, and is ranked 118th.

However, it is seen as a bit worrying that India is lagging behind many conflict-affected countries including Ukraine and Iraq. India's neighboring countries Pakistan are ranked 109th, China 68th, Sri Lanka 133rd, and Bangladesh 134th.

Similarly, Afghanistan is far behind as the unhappiest country in the world. It is reported that the regressive laws against women and the harsh living conditions they face are the main reasons for their unhappiness.

List of the 10 happiest countries in the world

  1. Finland
  2. Denmark
  3. Iceland
  4. Sweden
  5. Netherlands
  6. Costa Rica
  7. Norway
  8. Israel
  9. Luxembourg
  10. Mexico

Unhappy countries

WORLD HAPPIESTS COUNTRIES 2025: Afghanistan is again at the bottom of the list of happiest countries, with 147th place. The previous places are Sierra Leone (146), Lebanon (145), Malawi (144) and Zimbabwe (143).

Afghanistan is the unhappiest country in the world in this ranking. Afghan women say their lives are very difficult. Sierra Leone is second in the list of unhappiest countries in West Africa, followed by Lebanon in third place from last.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel