மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதி கொள்கை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் நிதி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார்.
ரிசர்வ் வங்கி, நிதியாண்டு 2026 -க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை முந்தைய மதிப்பீட்டான 6.7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கடைசி கொள்கை கூட்டத்தில், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ விகிதத்தை 6.5 சதவிகிதத்திலிருந்து 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்திருந்தனர்.
மேலும், 2 மாத இடைவெளியில் மீண்டும் 0.25 சதவிகிதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
0 Comments