Recent Post

6/recent/ticker-posts

10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு / Tamil Nadu Gazette announces that all 10 bills have become laws

10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு / Tamil Nadu Gazette announces that all 10 bills have become laws

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 10 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனையடுத்து தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

10 மசோதாக்களையும் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன், அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதவேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, தமிழ்நாடு அரசிதழில் 10 மசோதாக்களும் சட்டமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 18 நவ. 2023 தேதியில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel