மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள திருப்பதி – பகாலா – காட்பாடி ஒருவழி ரயில் பாதையை (104 கிலோமீட்டர்) இரட்டை ரயில் பாதையாக ரூ.1332 கோடி செலவில் மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தப் பணி மேம்படுத்தப்பட்ட ரயில் பாதைத் திறன் இயக்கத்தை மேம்படுத்தி, இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறன் மற்றும் சேவையில் நம்பகத்தன்மையை வழங்கும். பல்தடத் திட்டமானது செயல்பாடுகளை எளிதாக்கி கூட்ட நெரிசலைக் குறைக்கும்.
0 Comments