2024-25 நிதியாண்டின் அருணாச்சலப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், நாகாலாந்து, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கும் 15-வது நிதி ஆணையத்தின் ரூ. 1,440 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த மானியங்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் இரண்டு தவணைகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஜல்சக்தி அமைச்சகம் (குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை) ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிதி அமைச்சகத்தால் விடுவிக்கப்படுகிறது.
இதன்படி, 2024-25 நிதியாண்டின் முதல் தவணையாக ஒருங்கிணைந்த மானியம் மத்திய பிரதேசத்திற்கு ரூ.651.7794 கோடியும், குஜராத் மாநிலத்திற்கு ரூ.508.6011 கோடியும், 2022-23 நிதியாண்டின் முதல் தவணையாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.35.40 கோடியும், நாகாலாந்து மாநிலத்திற்கு ரூ. 19.20 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்திற்கு 2024-25-ம் நிதியாண்டின் 2-ம் தவணையாக ரூ.225.975 கோடி வழங்கப்பட்டுள்ளது.
0 Comments