Recent Post

6/recent/ticker-posts

மின்னணு போர் சாதனங்கள் மற்றும் எம்ஐ -17 வி 5 ரக ஹெலிகாப்டர்களுக்கான கருவிகளை கொள்முதல் செய்வதற்காக பெல் நிறுவனத்துடன் ரூ. 2,385 கோடி ஒப்பந்தம் / Rs. 2,385 crore deal with BHEL for procurement of electronic warfare equipment and equipment for Mi-17V5 helicopters

மின்னணு போர் சாதனங்கள் மற்றும் எம்ஐ -17 வி 5 ரக ஹெலிகாப்டர்களுக்கான கருவிகளை கொள்முதல் செய்வதற்காக பெல் நிறுவனத்துடன் ரூ. 2,385 கோடி ஒப்பந்தம் / Rs. 2,385 crore deal with BHEL for procurement of electronic warfare equipment and equipment for Mi-17V5 helicopters

இந்திய விமானப்படைக்கு மின்னணு போர் சாதனங்கள் மற்றும் விமானங்களை நவீனமாக்குவதற்குத் தேவையான கருவிகளை கொள்முதல் செய்வதற்கும், எம்ஐ -17 வி 5 ரக ஹெலிகாப்டர்களில் அவற்றை நிறுவுவதற்கும் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு சாதனங்களை கொள்முதல் செய்வதற்கான ரூ 2,385.36 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் 2025 ஏப்ரல் 7-ம் தேதி அன்று புதுதில்லியில் பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த அதிநவீன மின்னணு போர்விமான சாதனங்கள் இக்கட்டான சூழலில் ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவிடும். பெரும்பாலான உதிரி பாகங்கள் உள்நாட்டுத் தயாரிப்பாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும்.

இந்தத் திட்டமானது இந்திய மின்னணு மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அவற்றை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்.

எம்ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டருக்கான பாகங்களின் தொகுப்பு உள்நாட்டு மின்னணு போர் விமானங்களின் திறன்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். இது இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற திட்டத்தை ஊக்குவித்து நாட்டை தற்சார்பு இந்தியா நிலையை எட்டுவதற்கு உதவிடும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel