பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை எண் 7 (ஜிராக்பூர்-பாட்டியாலா) சந்திப்பில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை எண் 5 (ஜிராக்பூர்-பர்வானூ) சந்திப்பில் 19.2 கிலோமீட்டர் நீளத்திற்கு 6 வழி ஜிராக்பூர் புறவழிச்சாலை அமைக்கவும், பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவிடும் நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான மொத்த மூலதன மதிப்பீடு ரூ.1878.31 கோடியாகும்.
ஜிராக்பூர் புறவழிச்சாலை, ஜிராக்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-7 (சண்டிகர்-பதிண்டா) சந்திப்பில் இருந்து தொடங்கி ஹரியானாவின் பஞ்ச்குலாவில் தேசிய நெடுஞ்சாலை எண்-5 (ஜிராக்பூர் - பர்வனூ) உடன் நிறைவடைகிறது.
0 Comments