Recent Post

6/recent/ticker-posts

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 20வது அமைச்சரவைக் கூட்டம் / Tamil Nadu Chief Minister M.K. Stalin chairs 20th Cabinet meeting

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 20வது அமைச்சரவைக் கூட்டம் / Tamil Nadu Chief Minister M.K. Stalin chairs 20th Cabinet meeting

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (17.04.2025) மாலை 6 மணியளவில் 20வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குதல், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடத்திட அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிய தொழில்களில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் போது ரூ.10 ஆயிரம் கோடிக்கு முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்னயிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழில் துறையில் முதலீடு பெறப்படும். தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel