பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (04.04.2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாதுகாப்பான, துடிப்பான நில எல்லைகள்' என்ற வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொலைநோக்குப் பார்வைக்கான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு (VVP-II) ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் திட்டமாக 100% மத்திய அரசின் நிதியுதவியுடன் இது செயல்படுத்தப்படும்.
6,839 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில், அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், குஜராத், ஜம்மு காஷ்மீர், லடாக், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 2028-29 நிதியாண்டு வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
0 Comments