அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் நடைபெறும் இப்போட்டியில் கலப்பு அணிகள் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா-ரிஷப் யாதவ் இணை 153-151 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.
இதன் மூலம் 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. ரிஷப் யாதவுக்கு இது முதல் உலகக் கோப்பை தங்கம் ஆகும். ஜோதி சுரேகா வெல்லும் 11-ஆவது உலகக் கோப்பை தங்கம் இதுவாகும்.
ஆடவா் அணிகள் ரிகா்வ் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா, அதானு தாஸ், தருண்தீப் ராய்ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1=5 என்ற புள்ளிக் கணக்கில் சீன அணியிடம் தோற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினா்.
0 Comments