ராணுவ தளபதிகள் மாநாடு 2025 ஏப்ரல் 01 முதல் 4 வரை புதுதில்லியில் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்வதற்கும் மதிப்பிடுவதற்கும், வளர்ந்து வரும் சவால்களைச் சமாளிப்பதற்கான முக்கிய செயல்பாட்டு முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதற்கும் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு இந்த மாநாடு ஒரு தளமாக செயல்படுகிறது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சருக்கான அமர்வுக்கு தலைமை தாங்கி முக்கிய உரையாற்றுவார்.
இந்த அமர்வில் 'சீர்திருத்த ஆண்டில்' இந்திய ராணுவத்தின் கவனம் குறித்த விளக்கக்காட்சியும் இடம்பெறும். ராணுவத்தின் மூத்த தலைவர்களிடையே முப்படைத் தளபதி இந்த மாநாட்டில் முக்கிய உரையாற்றுவார்.
0 Comments