இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த மாதத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 243 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் அவரையேச் சேரும்.
ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கோப் டஃபி இடம்பெற்றிருந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய வீரர் ஷுப்மன் கில் வென்றிருந்த நிலையில், மார்ச் மாதத்துக்கான விருதினை ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments