2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான தொழில் உற்பத்திக் குறியீட்டெண் வளர்ச்சி வீதம் 2.9 சதவீதமாக உள்ளது. இது கடந்த மாதத்தில் 5.0 சதவீதமாக இருந்தது.
சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 1.6 சதவீதம், 2.9 சதவீதம் மற்றும் 3.6 சதவீதமாகும். இத்துறைகளின் உற்பத்தி குறியீடுகள் முறையே 141.9, 148.6 மற்றும் 194.0 ஆக உள்ளன.
தொழில்துறை சார்ந்த நிறுவனங்களின் உற்பத்தி விகிதம் (உலோகங்கள்), "எஃகு குழாய்கள், எடை குறைவான எஃகு பார்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளன.
மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் போன்ற வாகனங்களின் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தி, ஆகியவையும் வளர்ச்சி கண்டுள்ளன.
0 Comments