தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்டம் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட முதலீட்டு சூழலை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான JICA தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்காக ரூ. 2,106 கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்டம் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப நிலையான, எதிர்காலம் சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் வளர்ந்து வரும் பசுமைத் துறைகளில் கவனம் செலுத்துவதாக உள்ளதாகவும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments