உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.
வாரணாசி சுற்றுச் சாலை, சாரநாத் இடையே சாலை மேம்பாலம், நகரின் பிகாரிபூர், மண்டுவாடி சந்திப்புகளில் மேம்பாலங்கள், வாரணாசி சர்வதேச விமான நிலையத்தில் தேசிய நெடுஞ்சாலை 31-ல் ரூ.980 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகியவற்றுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
ரூ.1,045 கோடி மதிப்பிலான இரண்டு 400 கிலோவாட் மற்றும் ஒரு 220 கிலோவாட் மின் பகிர்மான துணை மின் நிலையங்களையும், அது தொடர்பான மின் வழித்தடத்தை அமைப்பதற்கான திட்டப்பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
தபேலா, ஓவியம், தண்டாய், திரங்கா பர்பி உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான புவிசார் குறியீடு சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார்.
0 Comments