இந்தியாவில் சில்லறை பணவீக்கம், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணால் அளவிடப்படுகிறது, இது அன்றாட பொருட்கள், சேவைகளின் விலையை பிரதிபலிக்கிறது. இது 2024-25 நிதியாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் 4.6% ஆக சரிந்தது. இது 2018-19-க்குப் பிறகு மிகக் குறைவானதாகும்.
நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை விலை பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்தில் 3.34 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 2019 ஆகஸ்ட்டுக்கு பின் அதாவது, 67 மாதங்களில் அதாவது சுமார் 6 ஆண்டுகளில் இதுவே குறைந்தபட்ச பணவீக்கம் ஆகும்.
காய்கறிகள், முட்டை, பருப்பு வகைகள், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைந்ததே பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த பிப்ரவரியில் 3.75 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்கள் பணவீக்கம், மார்ச் மாதத்தின் 2.69 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில், இஞ்சி, தக்காளி, பூண்டு போன்றவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
இதனிடையே கடந்த மாதம், நகர்ப்புறங்களில் பணவீக்கம் 3.43 சதவீதமாகவும்; கிராமப்புறங்களில் 3.25 சதவீதமாகவும் இருந்தது.
0 Comments