இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-வது பதிப்பான டஸ்ட்லிக்-6 புனேவில் ஆந்திலில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று (16.04.2025) தொடங்கியது. இந்த பயிற்சி 2025 ஏப்ரல் 28 வரை நடைபெறவுள்ளது.
60 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில் ஜாட் ரெஜிமென்ட், இந்திய விமானப்படை ஆகியவை பங்கேற்றுள்ளன. உஸ்பெகிஸ்தான் படைப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் ராணுவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கூட்டுப் பயிற்சி டஸ்ட்லிக்-6 என்பது இந்தியாவிலும் உஸ்பெகிஸ்தானிலும் மாற்றி மாற்றி நடத்தப்படும் வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும். கடந்த பதிப்பு ஏப்ரல் 2024-ல் உஸ்பெகிஸ்தானின் டெர்மெஸ்சில் நடத்தப்பட்டது.
இந்த பயிற்சியின் கருப்பொருள் "கூட்டு பன்முகக் களம், மரபுசார் செயல்பாடுகள்" என்பதாகும்.
0 Comments