தாய்லாந்தில் இன்று நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன் முயற்சி) உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
உச்சிமாநாட்டின் கருப்பொருள் – பிம்ஸ்டெக்: வளமான, உறுதியான மற்றும் வெளிப்படையானது" என்பதாகும்.
தலைவர்களின் முன்னுரிமைகளையும், பிம்ஸ்டெக் பிராந்திய மக்களின் விருப்பங்களையும், உலக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் தருணத்தில் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வளர்ச்சியை உறுதி செய்வதில் பிம்ஸ்டெக்கின் முயற்சிகளையும் இது பிரதிபலிக்கிறது.
மியான்மரிலும், தாய்லாந்திலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் தமது உரையைத் தொடங்கினார்
0 Comments