Recent Post

6/recent/ticker-posts

பிரதமரின் தாய்லாந்து பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் / Agreements signed during the Prime Minister's visit to Thailand


பிரதமரின் தாய்லாந்து பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் / Agreements signed during the Prime Minister's visit to Thailand

தாய்லாந்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, தாய்லாந்து பிரதமர் மேதகு திரு பத்ரோடன் ஷினவத்ராவை இன்று பாங்காக் நகரில் சந்தித்தார். அரசு இல்லம் சென்றடைந்த பிரதமரை திரு ஷினவத்ரா வரவேற்று சம்பிரதாய முறைப்படி வரவேற்றார்.

இது அவர்களின் இரண்டாவது சந்திப்பாகும். முன்னதாக, 2024 அக்டோபரில் வியன்டியானில் நடைபெற்ற ஆசியான் தொடர்பான உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்தனர்.

இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான ஒட்டுமொத்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். இந்தியா-தாய்லாந்து உத்திசார் ஒத்துழைப்பை நிறுவுவது குறித்த கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்காக தாய்லாந்து அரசின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்துக்கும் இந்திய அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

குஜராத்தின் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் தாய்லாந்து அரசின் கலாச்சார அமைச்சகத்தின் நுண்கலைத்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மத்திய அரசின் தேசிய சிறு தொழில்கள் கழகத்துக்கும், தாய்லாந்து அரசின் சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு அலுவலகத்துக்கும் இடையே குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மத்திய அரசின் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மத்திய அரசின் வடகிழக்கு கைவினைப்பொருட்கள், கைத்தறி மேம்பாட்டுக் கழகத்துக்கும் தாய்லாந்து அரசின் படைப்பாற்றல் பொருளாதார நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel