Recent Post

6/recent/ticker-posts

BHARATIYA BHASHA AWARD 2025 / பாரதிய பாஷா விருது 2025

BHARATIYA BHASHA AWARD 2025
பாரதிய பாஷா விருது 2025

BHARATIYA BHASHA AWARD 2025 / பாரதிய பாஷா விருது 2025

TAMIL

BHARATIYA BHASHA AWARD 2025 / பாரதிய பாஷா விருது 2025: பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த அமைப்பு கொல்கத்தாவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன் 100க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். தனது 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக 2018 ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றார்.

ஞானவாணி விருது, தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், பிரெஞ்சு, ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளன.

மே 1 ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள விழாவில் எஸ். ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்படும் என பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.

ENGLISH

BHARATIYA BHASHA AWARD 2025: The Bharatiya Bhasha Parishad organization selects and awards the best writers in India. This organization is based in Kolkata. It has been reported that the writer S. Ramakrishnan who receives this award will also be given a prize of Rs. 1 lakh.

S. Ramakrishnan has written more than 100 books. He received the Sahitya Akademi Award for the year 2018 for his novel 'Sanjaram'. He has received various awards including the Gnanavani Award, Tagore Literary Award, Iyal Award, Maxim Gorky Award, Literary Thought Award, Kalaignar Porkizhi Award, Codicea Lifetime Achievement Award, Literary Vel Award, and Tamil Nadu Government Award.

His works have been published in various languages ​​including English, German, Malayalam, French, Hindi, Bengali, Telugu, Kannada, Arabic, and Spanish.

S. Ramakrishnan will be felicitated at a function to be held in Kolkata on May 1. The Bharatiya Bhasha Parishad has announced that Ramakrishnan will be given the award.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel