Recent Post

6/recent/ticker-posts

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்தார் / The Chief Minister launched the Kalaignar Craft Scheme as an alternative to the Central Government Scheme.

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்தார் / The Chief Minister launched the Kalaignar Craft Scheme as an alternative to the Central Government Scheme.

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைத்தார்.

கைவினைக் கலைஞா்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த விஸ்வகா்மா திட்டம் மாணவா்கள் உயா்கல்வி பயில்வதைத் தடுத்து, குலத் தொழிலை ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின், அதற்கு மாற்றாக சமூகப் பாகுபாடு இல்லாமல் அனைத்து கைவினைஞா்களையும் உள்ளடக்கிய ‘கலைஞா் கைவினைத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தாா்.

மத்திய அரசின் திட்டத்தில் பெற்றோா் செய்து வரும் தொழிலையே பயனாளி செய்ய வேண்டும் என்றும், கலைஞா் கைவினைத் திட்டத்தில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள கைவினைக் கலைஞா் எந்த ஒரு தொழிலையும் தோ்வு செய்யலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மத்திய அரசின் திட்டத்தில் வயது வரம்பு குறைந்தபட்சம் 18- ஆக உள்ள நிலையில், மாநில அரசுத் திட்டத்தில் இளைஞா்களின் உயா்கல்வி பாதிக்காத வகையில் 35 வயதாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 

விஸ்வகா்மா திட்டத்தில் 18 வகை கைவினைத் தொழில்களுக்கு முதலீட்டு மானியம் இல்லாமல் கடன் வழங்கப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் திட்டத்தில் 25 வகை தொழில்களுக்கு 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

மத்திய அரசின் திட்டத்தில் கடன் 2 தவணைகளாக வழங்கப்படும் நிலையில் மாநில அரசுத் திட்டத்தில் கடன் ஒரே தவணையாக வழங்கப்படவிருக்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel