சட்டப்பேரவையில் மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் மாநில சுயாட்சி - தீர்மானத்தைத் தாக்கல் செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
மாநில சுயாட்சி உரிமை பறிக்கப்பட்ட வரும் இந்த சூழ்நிலையில் கூட்டாட்சி கருத்துக்களை வலியுறுத்தும் வகையிலும், ஒன்றிய மாநில அரசின் உறவுகளை அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி கூறுகள்; நடைமுறையில் உள்ள சட்டங்கள்; ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மறு மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அதற்கான நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வும் குழு ஒன்றினை அமைப்பது மிக மிக அவசியமாக இருக்கிறது.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் ரெட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு உயர்நிலைக் குழு அமைக்கப்படும்'' என்று அறிவித்துள்ளார்.
0 Comments