Recent Post

6/recent/ticker-posts

GI TAG FOR KUMBAKONAM BETEL LEAF AND THOVALAI MAANIKKA MALAI / கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

GI TAG FOR KUMBAKONAM BETEL LEAF AND THOVALAI MAANIKKA MALAI
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

GI TAG FOR KUMBAKONAM BETEL LEAF AND THOVALAI MAANIKKA MALAI / கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

TAMIL

GI TAG FOR KUMBAKONAM BETEL LEAF AND THOVALAI MAANIKKA MALAI / கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு: ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளைவிக்கப்படும் அல்லது குறிப்பிட்ட தனித்துவத்தோடு உருவாக்கப்படும் சிறப்பு வாய்ந்த, தனித்தன்மைகொண்ட பொருள்களை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசால் இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் புவிசார் பெற்ற பொருள்களை, எந்த நிலையிலும், வியாபார லாபத்துக்காகவோ, போலியாக வேறு யாரேனுமோ இந்தப் பெயரை பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

முதல்முறையாக, விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடிச் சேலை, காஞ்சிபுரம் பட்டுச்சேலை, மதுரை மல்லிகை, தஞ்சை கலைத்தட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உள்ளிட்ட பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், அண்மையில், மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண்ட பொம்மைகளுக்கும் புவிசார் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏப்ரல் 1ஆம் தேதி அன்று தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் அதிகமான பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, பெறப்பட்டும் வருகிறது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு திருவண்ணாமலை ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டி, திருநெல்வேலி, வீரவநல்லூர் செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 15 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பத்திருந்த நிலையில், தற்போது 2 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.

இதன் மூலம் புவிசார் குறியீடு பெற்ற விவசாயி பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், தயாரிக்கும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் உயரும், இப்பொருள்கள் உலக அளவில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ENGLISH

GI TAG FOR KUMBAKONAM BETEL LEAF AND THOVALAI MAANIKKA MALAI: This geographical indication is being granted by the central government to highlight special and unique products produced in a particular area or created with a specific uniqueness.

This recognition is being given to prohibit the use of this name by anyone else for commercial gain or forgery in any way. For the first time, a geographical indication has been granted to an agricultural product, Kumbakonam betel leaf.

Already, geographical indications have been obtained for products including Dindigul bootu, Salem sungudich saree, Kanchipuram pattuch saree, Madurai jasmine, Thanjavur Kalaithattu, Srivilliputhur palcoa, Kovilpatti nut candy, Palani panchamirtham, Kodaikanal malai poondu in Tamil Nadu.

Apart from that, recently, geographical indications were also announced for Madurai marikozundhu and Vilacheri clay dolls. On April 1, the geographical indication was granted to Kumbakonam betel nut and Thovalai manikka mala, which are among the proud agricultural products of Tamil Nadu.

Geographical indication is being granted under the Ministry of Industry and Commerce, Government of India. In recent times, steps have been taken and are being obtained for more products in Tamil Nadu to obtain geographical indication.

Already, last year, geographical indication has been granted to Namakatti, Tirunelveli, Veeravanallur Chediputta Saree, Kanyakumari Matti Banana, which are made in Jaderi village of Tiruvannamalai. While applications were made for geographical indication for 15 more products, geographical indication has been granted to 2 products.

Through this, the livelihood of the farmers and artisans who produce agricultural products that have been granted geographical indication will increase, and it is expected that these products will be marketed globally.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel