தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் திருத்தச் சட்டமுன்வடிவுகள் தொடா்பான அறிவிப்பை பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் சார்பாக இந்த இரண்டு சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள்.
பின்னர், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்தச் சட்டமுன்வடிவு மற்றும் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்தச் சட்டமுன்வடிவு ஆகியவற்றை முதல்வர் அறிமுகம் செய்தார்.
0 Comments