பாங்காக்கில் இருந்து புறப்பட்டு, நேற்று இலங்கை சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. தலைநகர் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை பிரதமர் மோடிக்கு சம்பிரதாய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அந்நாட்டு அதிபரின் செயலகத்தில் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தொடர்ந்து இரு தரப்பு அமைச்சர்கள், அதிகாரிகள் நிலையிலான உயர்நிலைக் குழு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், அதன் இறுதியாக, இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எண்மமயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
0 Comments