ஐக்கிய நாடுகள் சபையின் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தால் கப்பல் போக்குவரத்துத் துறையின் மீது விதிக்கப்பட்ட உலகின் முதல் உலகளாவிய கார்பன் வரிக்கு (Global carbon tax) ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. மேலும் 62 நாடுகளும் கார்பன் வரியை ஆதரித்து வாக்களித்துள்ளன.
ஒரு வார தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) லண்டனில் உள்ள சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) தலைமையகத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது கப்பல்களில் இருந்து பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் (Greenhouse gas emissions) குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கார்பன் மாசு இல்லாத வகையில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.
இந்த ஒப்பந்தத்தை இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட 63 நாடுகள் ஆதரிக்கின்றன. ஆனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, வெனிசுலா போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகள் எதிர்க்கின்றன.
அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகயில் பங்கேற்கவே இல்லை. வாக்கெடுப்பிலும் கலந்துகொள்ளவில்லை.
0 Comments