இந்திய மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவு 1974-ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது.
இதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண, கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு.
இதனை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் 4-வது முறையாக கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்த ஒரு முறையும், ஜெயலலிதா முதல்வராக இருந்த இரு முறையும் கச்சத்தீவு மீட்பு தீர்மானங்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
தற்போது 4-வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனிநபர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
0 Comments