இணையத்தில் (மக்கள் நீதிமன்றம்) லோக் அதாலத் சேவைகளை வழங்கும் முதல் மாநிலமாக கேரளம் மாறியுள்ளது. இதன்மூலம் இணையத்தில் மனுத்தாக்கல் செய்யவும், இணைய வாயிலாகவே ஆஜராகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் குறிப்பாக விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எளிமையாக நீதித் துறையை அணுக வேண்டும் என்ற நோக்கத்தில் இணையத்தில் லோக் அதாலத் சேவைகளை கேரளம் அறிமுகம் செய்துள்ளது.
கேரளத்தில் தற்போது திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் இணைய வாயிலான லோக் அதாலத் அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், தற்போது இணைய வாயிலாகவும் லோக் அதாலத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பு இந்தத் தடைகளை உடைத்தெரியும். இச்சேவை மே மாத முதல் வாரத்திலிருந்து முழு வீச்சில் அமலுக்கு வரும்.
இந்த முறையில் அனைவரும் நீதித் துறையை அணுக, மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்துகளில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமும் மனுத்தாக்கல் செய்து விசாரணைக்கு ஆஜராகும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
0 Comments