ஆந்திர மாநிலம் கா்னூலில் லேசா் வழிகாட்டுதலில் செயல்படும் 30 கிலோவாட் திறன்கொண்ட எம்கே-2(ஏ) எரிசக்தி ஆயுத அமைப்பை டிஆா்டிஓ பரிசோதனை செய்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுத அமைப்பு, தொலைதூரத்தில் இருந்த ட்ரோன்களை தாக்கி அழித்தது.
அத்துடன் பல ட்ரோன் தாக்குதல்களையும் அந்த ஆயுத அமைப்பு தடுத்து, கண்காணிப்பு சென்சாா்களையும் அழித்தது. இதன் மூலம், அந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தது.
மின்னல் வேகத்தில் செயல்பட்டு இலக்கை சில நொடிகளில் தாக்கியதன் மூலம், இது ட்ரோன்களுக்கு எதிரான மிகவும் ஆற்றல்வாய்ந்த ஆயுத அமைப்பாக உள்ளது.
0 Comments