பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆர்டிஓ) இந்திய ராணுவமும் 2025 ஏப்ரல் 03 & 04-ம் தேதிகளில், ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் நடுத்தர ஏவுகணைச் சோதனைய வெற்றிகரமாக நடத்தின.
நான்கு செயல்பாட்டு விமானச் சோதனைகள் அதிவேக வான் இலக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டன. ஏவுகணைகள் வான் இலக்குகளைத் தடுத்து அவற்றை அழித்து, நேரடித் தாக்குதலைப் பதிவு செய்தன.
நீண்ட தூரம், குறுகிய தூரம், அதிக உயரம் மற்றும் குறைந்த உயரத்தில் நான்கு இலக்குகளைத் தடுத்து நிறுத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயுத அமைப்பு செயல்பாட்டு நிலையில் இருந்தபோது விமானச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தால் பயன்படுத்தப்பட்ட ரேடார்கள் மற்றும் எலக்ட்ரோ-ஆப்டிகல் கண்காணிப்பு அமைப்புகள் போன்ற தூர கருவிகளால் கைப்பற்றப்பட்ட விமானத் தரவு மூலம் ஆயுத அமைப்பின் செயல்திறன் சரிபார்க்கப்பட்டது.
டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் விமானச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
0 Comments