ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த எம்.டி.பத்ரா கடந்த ஜனவரி மாதம் பதவியில் இருந்து விலகிய பிறகு அப்பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பூனம் குப்தாவை நியமிப்பதற்கு நியமனங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பூனம் குப்தா தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின்(என்சிஏஇஆர்) இயக்குனர் ஜெனரலாக உள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினர் மற்றும் 16வது நிதி கமிஷனுக்கான ஆலோசனை குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் நீண்ட காலம் பணியாற்றிய பூனம் குப்தா கடந்த 2021ல் என்சிஏஇஆர்-ல் அவர் சேர்ந்தார்.
0 Comments