மாநில ஆளுநர்கள் அதிகாரம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Power of State Governors - Supreme Court Verdict
TAMIL
மாநில ஆளுநர்கள் அதிகாரம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / Power of State Governors - Supreme Court Verdict: தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று முக்கியமான தீர்ப்பளித்தது.
தீர்ப்பின் படி, அரசியலைமைப்பு சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.
ஒன்று அவர், ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது ஆகியவை தான்.
அதேநேரம் அரசியல் அமைப்பின் பிரிவு 200-ன்படி, முதல் முறையாக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநர் விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம்.
அவ்வாறு பரிந்துரைத்து மீண்டும் சட்டசபைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். சட்டசபை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் அதன் பிறகு ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்கியதாக வேண்டும்.
அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் இல்லை. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்படக்கூடாது.
இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும் போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக இருக்கிறது.
எனவே குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக தமிழக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று இந்த உச்சநீதிமன்றம் கருதுகிறது.
ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம் ஆகும்.
ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்க / ஒப்புதல் அளிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயிக்கிறது பொது விதியாக, ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.
மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாக்கள் ஒதுக்கப்பட்டால், மூன்று மாதங்கள்.
ஆளுநர்களால் மறு பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் விஷயத்தில், ஒரு மாதம். இவை அதிகபட்ச காலக்கெடு ஆகும். ஆளுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ENGLISH
Power of State Governors - Supreme Court Verdict: The Tamil Nadu government has filed a case in the Supreme Court regarding the delay in giving assent to 10 bills sent by the Tamil Nadu government by Governor R.N. Ravi. A bench comprising Justices Pardiwala and Mahadevan, which heard the case, gave an important verdict today.
According to the verdict, under Article 200 of the Constitution, when bills are sent to the state Governor for assent, he has three options. One is to give assent, the second is to withhold assent, and the third is to send it for the consideration of the President.
At the same time, according to Article 200 of the Constitution, if the Governor wants to suspend the bill when it is passed by the Legislative Assembly for the first time and sent, he can recommend that the features in the bill be reconsidered or amendments made.
The recommendation should be sent back to the Assembly. If the Assembly passes the bill again and submits it to the Governor, the Governor cannot withhold assent after that. He is deemed to have given assent.
The Governor does not have the power of veto in the Constitution. There should be no unnecessary delay in taking decisions on bills. The Governor does not have the opportunity to recommend the bill to the President when it is sent for the second time. The law is clear that the Governor has to give his assent.
Therefore, the Governor of Tamil Nadu’s holding of 10 bills for the consideration of the President is illegal and wrong in law. This Supreme Court is of the opinion that the subsequent steps taken are also illegal.
Although there is no time limit for the Governor’s assent, it does not mean that he can keep the bills indefinitely. What it means is that in cases where time is not fixed in the Constitution, the decision should be taken within a reasonable period.
The Supreme Court has fixed a time limit of one to three months for the Governor to hold/assent bills. As a general rule, the Governor has to follow the advice of the Cabinet. If the bills are assigned for the consideration of the President against the advice of the State Cabinet, then three months.
In the case of bills submitted for reconsideration by the Governors, then one month. These are maximum deadlines. The ruling states that the governors must take immediate action.
0 Comments