REPORT ON POLICE AND JUSTICE DELIVERY PERFORMANCE 2025
காவல்துறை மற்றும் நீதி வழங்கல் செயல்பாடு குறித்த அறிக்கை 2025
TAMIL
REPORT ON POLICE AND JUSTICE DELIVERY PERFORMANCE 2025 / காவல்துறை மற்றும் நீதி வழங்கல் செயல்பாடு குறித்த அறிக்கை 2025: 2025ஆம் ஆண்டு காவல்துறை மற்றும் நீதி வழங்கல் செயல்பாடு குறித்த நீதித்துறையின் நான்காவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தென் மாநிலங்கள் முதல் 05 இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் மேற்கு வங்கம் கடைசி இடத்தில் உள்ளதாக, இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியின் நான்கு தூண்களான, காவல்துறை, சிறைச்சாலைகள், நீதித்துறை மற்றும் சட்ட உதவி மீதான மாநிலங்களின் செயல்திறன் தரவரிசைக்கு பரிசீலிக்கப்பட்டது.
அதன்படி குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும், நீதி வழங்குவதிலும் மாநிலங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
2025-நீதித்துறை 04-வது அறிக்கையின் படி, தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை டாப் 05 இடங்களை பிடித்துள்ளது. இதில் மேற்கு வங்கம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
அறிக்கையின் படி, ராஜஸ்தான், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நீதித்துறை செயல்பாட்டில் முன்னேற்றம் கண்டுள்ளன. அத்துடன், சிறைத்துறை செயல்பாட்டில் ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களும் முன்னேற்றம் கண்டுள்ளன.
மேலும், சட்ட உதவி வழங்குவதில் ஹரியானா மாநிலம் முன்னேற்றம் கண்டுள்ளது. காவல்துறை மற்றும் நீதி வழங்கல் செயல்பாட்டில், ஏழு சிறிய மாநிலங்களில், சிக்கிம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இதில், கோவா பின்தங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ENGLISH
REPORT ON POLICE AND JUSTICE DELIVERY PERFORMANCE 2025: The fourth report of the Department of Justice on the functioning of the police and delivery of justice in 2025 has been released.
In this, the southern states have occupied the top 05 positions. West Bengal is at the bottom of the list, according to the report released today. The performance of the states on the four pillars of justice, namely police, prisons, judiciary and legal aid, was considered for the ranking.
Accordingly, the report has informed about how the states are performing in fighting crime and delivering justice. According to the 04th report of the Department of Justice 2025, the southern states of Karnataka, Andhra Pradesh, Telangana, Kerala and Tamil Nadu have occupied the top 05 positions. West Bengal has occupied the last position in this.
According to the report, the states of Rajasthan, Kerala and Madhya Pradesh have made progress in the functioning of the judiciary. In addition, the states of Jharkhand and Odisha have also made progress in the functioning of the prison sector.
Moreover, the state of Haryana has made progress in the provision of legal aid. Sikkim has performed best among the seven small states in policing and justice delivery, while Goa has been noted to be lagging behind.
0 Comments