வக்ஃப் திருத்த சட்ட மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்து.இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த சட்டத்தை பரிசீலிக்க கூட்டு நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை செய்யப்பட்டது.
இதனையடுத்து கூட்டு நடவடிக்கை குழுவின் ஆய்வின் போது எதிர்கட்சிகள் கொடுத்த திருத்தம் முழுவதுமாக நிராகரிக்கப்பட்டு மீண்டும் வக்ஃப் திருத்த சட்ட மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்காக அவை நள்ளிரவு வரை நடைபெற்றது.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் பதிலுக்குப் பிறகு, சபாநாயகர் ஓம் பிர்லா, அவையின் முடிவிற்காக பட்டியலிடப்பட்ட வணிகத்தில் உள்ள உருப்படி எண் 12 - வக்பு (திருத்த) மசோதா, 2025 - எடுத்துக் கொள்ளப்படுவதாக அறிவித்தார்.
மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பின்னர் "திருத்தங்களுக்கு உட்பட்டு, இந்த மசோதாவிற்கு ஆதரவு 288, எதிர்ப்பு 232. பேரும் வாக்களித்தனர்.
0 Comments