மாநிலங்களவையில் வியாழக்கிழமை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து, வக்ஃப் சட்டத் திருத்த மசோதா ஏப். 4 அதிகாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, சுமாா் 12 மணி நேர விவாதத்துக்கு பிறகு புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இந்த நிலையில், மாநிலங்களவையில் வியாழக்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
0 Comments